இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆளாக வாக்களித்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் எம்பிக்களும் வாக்களித்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை5மணிக்குநிறைவுபெற்றது. நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளை சேர்ந்த எம்.பி.க்களும் இதில் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 783 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், மாலை 5 மணி வரை 770 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர், மாநிலங்களவை தலைவராகவும் செயல்படுவார். குடியரசுத் துணைத் தலைவரின் பதவி காலம் 5 ஆண்டுகள். ஆனால்அவரதுபதவிகாலம்முடிந்தாலும்கூடஅடுத்தநபரைதேர்ந்தெடுக்கும் வரை,அவர்அப்பதவியில்தொடரலாம். முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும், சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியும், அகாலி தளமும் புறக்கணி்பபதாக அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது வெற்றி யாருக்கு?
9/09/2025
0
குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் மாநிலங்களவை தலைவராகவும் இருப்பார். குடியரசுத் துணைத் தலைவரின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும்.ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜிநாமா செய்தார். பதவிக் காலம் முடிவடைவதற்குள்ளாகவே, உடல் நிலையை காரணம் காட்டி அவர் ராஜிநாமா செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாக பி. சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக அரசியல் பின்னணியை கொண்டவர். ஆனால், சுதர்சன் ரெட்டி அரசியல் சாராதவர். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்.
