இந்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் சிவா மற்றும் 5 போ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முருகன் தரப்பில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.முறையீட்டை நேற்று விசாரணைக்கு ஏற்ற மாவட்ட நீதிமன்றம், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷுக்குகண்டனம்தெரிவித்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தாவிட்டால், சிறையில் அடைக்க உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்தது.இருப்பினும், குற்றம்சாட்டப்பட்டவர்கள்நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படாததால் டிஎஸ்பி சங்கா் கணேஷை காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் எஸ்பி, டிஎஸ்பி மற்றும் வாலாஜாபாத் காவல் துறை ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் பேக்கரி உரிமையாளரும் நீதிபதியின் தனி பாதுகாப்பு அதிகாரி லோகேஷின் மாமனாருமான சிவாவுக்கு எதிரான வழக்கில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம் என்பதால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.மேலும் இரு தரப்பினருக்குமிடையே சமரசம் ஏற்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும், இருப்பினும் அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணை அதிகாரியான டிஎஸ்பியை நீதிமன்றத்தில் அமர வைத்து, இறுதியில் சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், “குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வது, புலன் விசாரணை அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. டிஎஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன், நிர்வாக ஒப்புதல் பெறவேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்பதால் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்தஉத்தரவைரத்துசெய்கிறேன்எனதீர்ப்பளித்தார்.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
சென்னை:காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது செய்யப்பட்ட உத்தரவு ரத்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
9/09/2025
0
குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வது, புலன் விசாரணை அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம்தெளிவுபடுத்தியுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பியை கைது செய்ய முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வந்த சிவா என்பவரின் கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவர் பொருட்கள் வாங்க வந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியர்களை முருகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில்புகாா்அளித்தனா். முருகன் அளித்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே போல் சிவா அளித்த புகாரில் முருகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
