இது முடிந்தவுடன் இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளதாகவும்
2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவுள்ளோம் என்றார்.ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது என்றும் மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும், ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
மேலும் இது ஐஎஸ்ஆர்ஓமட்டுமல்லாமல் ஏரோ, NAVY உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கிறார்கள் என்றார்.உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம் என்றும் நிலாவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமராநம்நாட்டினுடையதுதான், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல் நாடு இந்தியாதான்ராக்கெட் இன்ஜினியிலும் சாதனைகளை படைத்துள்ளோம் என்றார். மேலும் நம் நாட்டில் 55 சதவிகிதம் பாமர மக்களின் விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளது என கூறிய அவர் மாணவர்கள் அனைவரும் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர் என்றார்.AI தொழில்நுட்பம் விண்வெளித் துறையிலும் வந்துவிட்டது என தெரிவித்த அவர், வயோமித்ரா என்பதும் ஏஐ டெக்னாலஜி தான் சந்திராயன் 4 நிலாவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் AI ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம் என்றார்.
