கோவையில் விக்சித் பாரத் திட்டத்தி்ல் கல்விசார் தலைமை குறித்த மாநாடு!!!

sen reporter
0

மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இதில்,புதிய துணைவேந்தர்கள் பங்கேற்புஇந்தியா சுதந்திரம் அடைந்த 100 வது ஆண்டான 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையில் விக்சித் பாரத் திட்டத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டின் துவக்க விழா நடைபெற்றது.அனைத்திந்திய பல்கலைக்கழகங்களின்கூட்டமைப் போடு இணைந்து நடைபெற்ற இதில்,புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.விக்சித் பாரத் மற்றும் அதற்கு மேலான மாற்றம் வழங்கும் உந்துசக்தி என கல்விசார் தலைமை குறித்து நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர்.பாரதி ஹரிசங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையேற்று துவக்கி வைத்து பேசினார்.அப்போது பேசிய அவர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் பெண்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, தொலைநோக்குப் பார்வையோடு ஒரு சிறிய கல்லூரியாகத் துவங்கப்பட்ட அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனம், இப்போது ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக பரிணமித்து, தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்ந்து முன்னேறி வருவதாக தெரிவித்தார்.2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா "விக்சித் பாரத்" என்றதொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதை இந்த நிறுவனம்உறுதிஅளிப்பதாகஅவர்கூறினார்.முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில்சிறப்புவிருந்தினர்களாக அனைத்திந்தியபல்கலைக்கழகங்களின்கூட்டமைப்பின்பொதுசெயலாளர்பங்கஜ்மிட்டல்,மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரூபா மித்ரா சவுத்ரி,தேசிய தொழில் சார் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் கல்ஸி,பதிவாளர் இந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து துணைவேந்தர்கள்,கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top