சென்னை:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம் நவம்பர் 15,16,இல் தேர்வு!!!
9/12/2025
0
டெட்தேர்வுக்கு(TET)விண்ணப்பிப்பதற்கானகாலஅவகாசம்நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தேர்வுக்கு மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.2025 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு எழுதுவதற்கு, ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததுஇந்தநிலையில்இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீடிப்பு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தாெடர்ந்து செப்டம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த காலஅவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமாக 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வுவாரியம்தெரிவித்துள்ளது.இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.9.2025 முதல் 13.9.2025 வரை திருத்தம் செய்ய ஆசிரியர்தேர்வுவாரியஇணையதளத்தில்வழிவகைசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தகுதித்தேர்வு தாள்- I நவம்பர் 15 ஆம் தேதியும், தாள்- II நவம்பர் 16 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வுகள் ஓஎம்ஆர் முறையில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தேர்வு நேரத்தில் முறைகேட்டில் ஈடுபடும் போட்டியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுக்கான விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.இந்தியா முழுவதும் உள்ள பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதேபோல், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.அதில் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்பதிலிருந்து விலக்கு பெறுவது குறித்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களும், தமிழ்நாடு அரசும் ஆலோசனை செய்து வருகின்றன. இந்த நிலையில், டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
