வேலூரில் மழையால் கழிவுநீருடன் வீடுகளுக்குள் புகுந்தால் மக்கள் அவதி!!!!
9/16/2025
0
வேலூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் போதிய சாலை மற்றும் கால்வாய் வசதிகள் இல்லாத பகுதியான சத்துவாச்சாரி பகுதி 3, அன்னை தெரசா நகர் மற்றும் கொணவட்டம் அடுத்த சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவுநீரோடு மழை நீர் புகுந்தது .இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர் .சில இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தராததுதான் இதற்கு காரணம் என்று பொதுமக்கள் மாநகராட்சி மீது குற்றம் சுமத்துகின்றனர் .மழை வருவதற்கு முன்பே இது போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தால் தாங்கள் மழை வந்தால் இப்படி சிரமப்பட வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
