தேனி: நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர் மூளைச்சாவு உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்!!!

sen reporter
0

தேனி மாவட்டம், கூழையனூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் முனியாண்டி (27). இவர், கடந்த 7ஆம் தேதி, இரவு 8 மணி அளவில் சின்னமனூர், வேப்பம்பட்டி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பிறகு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.தலைக்காயப்பிரிவு தீவிர சிகிச்சைக்கான 101 ஐசியூ வார்டில் முனியாண்டிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 3 மணியளவில் அவர், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் முனியாண்டியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர்கள் முன் வந்தனர். எனவே முனியாண்டியின் தாயார் ராணியிடம் ஒப்புதல்பெறப்பட்டது.இதைத்தொடர்ந்து கல்லீரல் திருநெல்வேலி காவேரி மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், சிறுகுடல் மற்றும் நுரையீரல் சென்னைஎம்ஜிஎம்மருத்துவமனைக்கும், கருவிழிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், ''மூளை சாவடைந்த முனியாண்டியின் உடல் தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன்அவரதுகுடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மூளைச்சாவுஅடைந்தமுனியாண்டியின் உடல் உறுப்புகளை தானம் செய்த நோயாளியின் உறவினர்களுக்கும், காவல்துறைக்கும், மருத்துவமனை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உடல் உறுப்பு தானத்தால் 6 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காகதேனிமாவட்டநிர்வாகத்திடம்உடல்உரியமரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது'' என்று மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top