கோவை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி அறிக்கை அளிப்போம் கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி பேட்டி!!!
9/30/2025
0
கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்உயிரிழந்தோர்எண்ணிக்கை 41ஆகஉள்ளது.மேலும்51பேர்கரூர்அரசுமற்றும்தனியார்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு கரூரில் நிலைமையை ஆய்வு செய்ய வந்து உள்ளது.குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர்இடம்பெற்றுஉள்ளனர். கோவை விமான நிலையம் வந்தடைந்த பின் ஹேமமாலினி, கரூரில் நடந்த துயரமான விபத்து குறித்து கேட்டறியவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்து உள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க உள்ளோம். பின்னர், நடந்த சம்பவம் குறித்து விரிவானஅறிக்கைதயார்செய்யப்படும், என்றார்.நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நாங்கள் இதுவரை அவரைச் சந்திக்கவில்லை. எட்டு பேர் கொண்ட எங்கள் குழு நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிமக்களையும்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும்சந்திக்கஇருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்திப்போம்,என்று குழு உறுப்பினர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
