வேலூர்:பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா!!!
10/01/2025
0
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சாத்கர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.இந்தவிழாவுக்கு சாத்கர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.சங்கீதா பிரியா சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.நீலா கபில் முன்னிலை வகித்தார். இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர். வி.அமலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜெ.சித்ரா ஜெனார்தனன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் டி.லலிதா டேவிட், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏ.கௌதமன், எல்.விஜயா லாசர், முருகேசன், தேவகி மதியழகன், ராஜேந்திரன், அம்மு, அல்லி முத்து, முனிசாமி, மதிக்குமார், சமினா சிராஜ், நிஜாம் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் (பொறுப்பு) ஊராட்சி செயலாளர் ஏ.மணிவண்ணன் நன்றி கூறினார்.
