வேலூர்:அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கிய வேலூர் திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்எல்ஏ!!!!

sen reporter
0

 அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கிய வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார்எம்எல்ஏ.கடந்த 4 ம் தேதி இரவு அந்தமான் & நிகோபார் மாநில திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்தமான் மாநில திமுக  சார்பில் வணிக வளாகம் கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான உதவி வேண்டும் என்று வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ  ஏ. பி. நந்தகுமாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே தன்னுடைய சார்பில் ரூ.1 லட்சம் வழங்குவதாக 4ம் தேதி இரவு உறுதி அளித்தார்  எம்எல்ஏ. இதைத்தொடர்ந்து பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ. பி.நந்தகுமார் எம்எல்ஏ 5ம் தேதி  அவர்களிடம் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை நிதியாக அளித்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள்  துரைசந்திரசேகர், ஒய்.பிரகாஷ், மயிலை தா.வேலு, மு.பெ.கிரி, லண்டன் அயலக அணி நிர்வாகி முகமது பைசல் மற்றும் அந்தமான் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஏ. எல். குழந்தை, துணை அமைப்பாளர்கள் ராஜா மருதவாணன், வெ.சு.செந்தில்குமார்,எம்.சின்னத்தம்பி,  பொருளாளர் வெ.ரவிச்சந்திரன், இளைஞரணி அமைப்பாளர் ராஜா, துணை அமைப்பாளர் ஜாஹிர் ஹூசேன்,  முன்னாள் துணை அமைப்பாளர் ஜெயசிங்க ராஜா மற்றும் திமுக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top