அதேபோல், மதுரை மாவட்டத்திலும் நாளை நடைபெறவுள்ள முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை 8 மணி அளவில் கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து, முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள், தேவர் சமுதாய அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர்.முக்கிய பிரமுகர்கள் பலர் மரியாதை செலுத்த வரும் காரணத்தால் கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள விவரங்களை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. இதற்காக, மாநகர் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகின்றன.காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து பசும்பொன் செல்லும் வழியில் உள்ள திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம், கமுதி உள்ளிட்ட பகுதிகளிலும், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பிட்ட சில முக்கியமான இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் சில குறிப்பிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
இராமநாதபுரம்:நாளை முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு வாகன நுழைவுக்கு கடும் கட்டுப்பாடு!!!
10/29/2025
0
குரு பூஜை விழாவில் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை (அக்.30) நடைபெறுவதை ஒட்டி, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் 10,000க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், தடை உத்தரவும் அமலில் இருப்பதால், காவல்துறை அனுமதி பெற்ற சொந்த வாகனங்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட உள்ளன. வாடகை வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.அதேபோல், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் பசும்பொன் பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுரை நோக்கி வரும் வாகனங்கள் பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், சருகனி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மேலும், பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணத்தின்போது வாகனத்தின் வெளிப்புறத்தில் தொங்குதல், கூரையில் அமர்தல், வெடி வெடிப்பது போன்ற விதிமீறல்கள் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பு நடவடிக்கையாக 38 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் பேருந்துகளில் பயணிக்கும் மக்களை கண்காணிக்க, ஒவ்வொரு பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 300 உடை கேமராக்கள் (உடையில் பொருத்தப்படும் கேமரா) வழங்கப்பட்டுள்ளன. மேலும், பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 57 இருசக்கர மற்றும் 53 நான்கு சக்கர ரோந்து படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. விழாவில் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
