தூத்துக்குடி:சிவன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!!!
10/29/2025
0
தூத்துக்குடி சிவன் கோவிலில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி சன்னதியில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கம் (கட்டளை) சார்பில் 131வது ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த அக்டோபர் 22ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடந்த 27ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று 28ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு ரதவீதி - மேலரதவீதி சந்திப்பில் உள்ள தபசு மண்டபத்தில் காலையில் ஸ்ரீ தெய்வயானை அம்பாள் தபசு காட்சி நடைபெற்றது. மாலையில் தெற்கு ரத வீதியில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி காட்சி கொடுத்தலும், மாலை மாற்றும் நிகழ்வும், நடைபெற்றது. இரவு திருக்கோவிலில் வைத்து பக்தர்களின் ஹரோ ஹரா கோஷம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி துணைத் தலைவர் அசோக் குமார், தொழிலதிபர் கேஏபி சீனிவாசன், சிவன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி பி.எஸ்.கே. ஆறுமுகம் டிஏ சில்க்ஸ் அதிபர் டி.ஏ. தெய்வநாயகம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் பிரமநாயகம், செயலாளர் எம்எஸ்எஸ் கந்தப்பன், துணைத் தலைவர் ராமலிங்கம், உதவிச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
