மேலும் அவற்றுக்கு பின்னே 8,400 அட்டைப் பெட்டிகளில் சீன பட்டாசுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். கன்டெய்னர்களில்இருந்தபொருட்களுடன் சீன பட்டாசுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சீன பட்டாசுகளை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. தொழில் அதிபர்கள் சிலர் என்ஜினீயரிங் பொருட்கள் பெயரில் ஆவணம் தயாரித்து, சீன பட்டாசுகளை கன்டெய்னர்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகிய 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.கைதான 4 பேரையும் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.7 கோடி பொம்மைகள்;இதேபோன்று சீன துறைமுகமான நிங்போவில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றொரு கப்பலில் கன்டெய்னர்கள் வந்தன. அதில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்குவந்த4கன்டெய்னர்களில்ஹெல்மெட்,விளையாட்டுஉபகரணங்கள்,பிளாஸ்டிக்பொருட்கள்இருப்பதாகஆவணத்தில்குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அந்த கன்டெய்னர்களை திறந்து சோதனை செய்தனர்.அதில், சட்ட விரோதமாக சீனாவில் இருந்து விளையாட்டு பொம்மைகள் மற்றும் ஷூக்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இவற்றினை இந்தியாவிற்குள் கொண்டு வர தரச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றவை என்பதால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியாகும். இதனை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த சிலரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
