கொடைக்கானல்:அருவியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம் இரண்டாவது நாளாக தொடரும் தேடுதல் பணி!!!

sen reporter
0

கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் மூழ்கி மாயமான மருத்துவக் கல்லூரி மாணவரின் உடலைத் தேடும் பணி  2-வதுநாளாக தொடர்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக, கொடைக்கானல்அருகேபேத்துப்பாறை மலைக்கிராமத்தின் கீழ் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது ஐந்து வீடி அருவி. இந்த அருவியை பார்வையிட நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதற்கு ஏற்ப, ஐந்து அருவி ஆபத்தானதாகவும், அருவியின் தடாகத்தில் சுழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு குளிப்பதற்கும், அருகே சென்று புகைப்படங்கள் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், சிலர் தடையை மீறி அருவியில் குளிப்பது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஐந்து வீடு அருவியில் குளிப்பதற்காக நேற்று (அக்.18) மாலை நேரத்தில் அங்கு வந்தனர்.அப்போது, பொள்ளாச்சியை சேர்ந்த நந்தகுமார் (21) எதிர்பாராத விதமாக அருவியின் தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் நந்தகுமார் வெளியே வராததால், சந்தேகமடைந்த சக நண்பர்கள்அவரைதேடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிலர் அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நந்தகுமாரின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இரவு நேரம் என்பதாலும் அருவியில் நீரின் ஓட்டம் அதிகரித்ததாலும் தேடல் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த ரூ.12 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்தொடர்ந்து, 2 ஆவது நாளாக இன்று காலையில் வந்த தீயணைப்புத் துறையினர் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். தற்போது வரை அருவியில் மூழ்கி மாயமான நந்தகுமாரின் உடல் கிடைக்கவில்லை.மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இந்த அருவியில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், ஐந்து வீடு அருவிக்கு செல்லக்கூடிய பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது வரை அங்கு பாதுகாப்புகம்பிகள்அமைக்கப்படாததால், உயிரிழப்புகள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top