இந்நிலையில், தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை தூண்டில் வளைவை முறையாக அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இன்று (அக.23) திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள் கரையில்நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் ராபர்ட் கூறுகையில், தூத்துக்குடியில் உள்ள முக்கிய தொழில்களில் ஒன்று மீன்பிடி தொழிலாகும். அந்த வகையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நாட்டுப் படகு மீனவர்களும், தூத்துக்குடியில் லைன்ஸ் டவுன் பகுதியில் விசைப்படகு மீனவர்களும் தங்களது படகுகளை நிறுத்தும் தளங்களை ஏற்படுத்தி தொழில் செய்து வருகிறார்கள்.நாட்டுப் படகு மீனவர்கள் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்துள்ள பகுதிக்கு வடபுறத்திலும், தென்புறத்திலும் தூண்டில் வளைவு அமைப்பதற்கு கடந்த 2005ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சுமார் ரூ.7.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பணிகள் நிறைவு பெற்றது.ஆனால், வடபுறத்தில் மட்டும் 1030 மீட்டர் பணியை முழுமையாக முடித்து விட்டு, தென்புறத்தில் 550 மீட்டருக்கு பதிலாக 230 மீட்டரை மட்டும் முடித்து விட்டு, வேலையை முடிந்து விட்டதாக கூறி ஒப்பந்ததாரர் சென்று விட்டார். ஆனால், அரசு திட்டமிட்டபடி தென்புறத்தில் கிழக்கு நோக்கி கடல் பகுதியில் இன்னும் 220 மீட்டர் தூண்டில் வளைவு போடப்படாமல் உள்ளது. அதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் கடல் அலை சீற்றம் காரணமாக சேதமடையும் சூழல் நிலவுகிறது.ஆகையால், இந்த விஷயத்தில் உடனடியாக அரசு தலையிட்டு, திட்டமிட்ட முழு தூண்டில் வளைவு பாலத்தையும் அமைத்து தர வேண்டும். இதன் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், இந்த போராட்டத்தை மாநிலம் முழுவதும் முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி:திரேஸ்புரம் துறைமுக தூண்டில் வளைவு விவகாரம் போராட்டத்தில் ஈடுப்பட்ட மீனவர்கள்!!!
10/23/2025
0
திரேஸ்புரம்நாட்டுப்படகுமீன்பிடிதுறைமுகத்திலிருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திரேஸ்புரம் கடற்கரையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு முறையாக அமைக்கப்படாமல், ஒரு பகுதியில் பாதி தூண்டில் வளைவு போடப்பட்டு மீதி தூண்டில் வளைவு போடாமல் நிறுத்தப்பட்டுள்ளது.அதனால், அதிவேக காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் நாட்டுப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்து வருகிறது. எனவே, மீனவர்கள் பாதிக்காத வண்ணம் தூண்டில் வளைவை முறையாக அமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறையிடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நிதியும் ஒதுக்கப்படாமல் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
