இதனால், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் (அக்.23) வியாழக்கிழமை இரவு, மற்றொரு தரப்பைச் சேர்ந்த 5 பேரை வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். இதில், காயமடைந்த குட்டி (25), தினேஷ் (23), சூர்யா (27), சமுத்திரம் (56), வினோத்குமார் (27) ஆகியோர் சிகிச்சைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூர் போலீசார், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ரஞ்சித் குமார் (25), ஈஸ்வரன் (19), திலகராஜ் (21), ராஜபாண்டி (22), ராமச்சந்திரன் (30) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று (அக்.24) ஐந்து கடை பஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, இராஜபாளையம் டிஎஸ்பி பஸீனா பீவி, சேத்தூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். இதில், போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை அவர்களை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்:இராஜபாளையம் அருகே வீடு புகுந்து ஐந்து பேரை வெட்டிய சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது!!!
10/25/2025
0
விருதுநகர் கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி,பாதிக்கப்பட்டதரப்பைசேர்ந்தவர்கள் ஐந்து கடைபஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராஜபாளையம் அருகே சேத்தூரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து 5 இளைஞர்களை அரிவாளால் தாக்கிய சம்பவத்தில், நடவடிக்கைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீசார்கைதுசெய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் ஐந்து கடை பஜார் பகுதி உள்ளது. இங்குள்ள இரு தரப்பினரிடையே ஏற்கனவே முன்விரோதம் நிலவி வந்த நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் மீண்டும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேத்தூர் போலீசார், தகராறில் ஈடுபட்ட சிலரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை செய்து பின்னர் விடுவித்தனர்.
