திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சாதிரீதியிலான புகார்களே அதிகம் மனித உரிமைகள் ஆணையம்!!!

sen reporter
0

திருநெல்வேலி,தென்காசிமாவட்டங்களில் சாதிரீதியிலானபாதிப்பு புகார்களேஅதிகம்வருவதாகதமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கூறியுள்ளார்.தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் சென்று, புகார்களை விசாரித்து அதற்கான தீர்ப்புகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், திருநெல்வேலியில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரின் விசாரணை அரசினர் சுற்றுலா மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது.அப்போது, மேற்கு தொடர்ச்சி மலை கிராமமான திருப்பணிபுரத்தில் மக்கள் 41 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி தவித்து வருகிறார்கள் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அடுத்த மாதத்திற்குள் மின்சாரம் வழங்கும் வகையிலான ஒப்புதலை அரசின் சார்பில் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள்உறுதிஅளித்தனர். இதனிடையே, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வொரு மாதமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. அதில் தகுதியுடைய புகார்கள் வழக்காக எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. திருநெல்வேலி மண்டலத்தில் தற்போது 14 வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 41 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத திருப்பணிபுரம் வழக்கும் விசாரிக்கப்பட்டது என்றார்.

சிறைச்சாலைகளுக்கு வெளியே இருந்து உணவு கொண்டு செல்லப்படுவதாக எழுந்த புகார்கள் தொடர்பான கேள்விக்கு, சில முக்கிய வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார்கள் வழக்கமாக வரும். ஆனால், இதில் 99 சதவீதம் உண்மை இல்லை என்பதே விசாரணைக்கு பிறகு தெரிய வரும். சிறைச்சாலைகளில் தற்போது தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன. அவர்களுடைய பாதுகாப்பிற்கு சிறைத்துறையே பொறுப்பாகும் என்பதால் இதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய கண்ணதாசன், மாநில மனித உரிமை ஆணையத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொது சேவையில் முழுமையான மன நிறைவை பெற முடியாது, தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதே பொதுச் சேவையில் நோக்கமாக இருக்கும்.மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்குள் புகார்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது, சிவில் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய முடியாது. மேலும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து சாதிரீதியிலான பாதிப்பு புகார்களே அதிகம் வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சிவில் பிரச்சினைகள் தொடர்பான புகார்கள் வருகின்றன.சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் காவல்துறை செயல்பாடுகள் குறித்த புகார்கள், மோதல்கள் தொடர்பான புகார்கள் கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து வருகின்றன என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top