சிவகங்கை:தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வரை சிவகங்கையில் தடை உத்தரவு!!!

sen reporter
0

சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் 23  முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 163 (1) (முந்தைய சட்டப்படி பிரிவு 144) தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெரிய மருது (மருதுபாண்டியர்) மற்றும் சின்ன மருது (வழுதிவூர் மருதுபாண்டியர்) இருவரும் சிவகங்கை சமஸ்தானத்தில் ராணி வேலு நாச்சியாரின் முக்கிய ராணுவத் தளபதிகளாக இருந்தவர்கள் ஆவர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். இவர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று திருப்பத்தூர் அருகே உள்ள கயிலாயமுத்து (திருப்பத்தூர் கோட்டை) பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் அக்டோபர் 24ஆம் தேதி, மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.சிவகங்கை, திருப்பத்தூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் திருப்பத்தூரில் உள்ள மருது மணிமண்டபத்தில் ஒன்று கூடி மரியாதை செலுத்துவது வழக்கம். மேலும், அன்றைய தினம் அரசு சார்பிலும் மருது மணிமண்டபத்தில் அவர்களது சிலைக்கு மாலை அணிவித்துமரியாதைசெலுத்தப்படும். இதைத்தொடர்ந்து,அக்டோபர்27ஆம் தேதி,சமூகஅமைப்புகள்சார்பில்காளையார்கோவில் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.அதேபோல், அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அன்று குருபூஜை நடைபெறும். பெரும்பாலான தென் மாவட்ட மக்கள் பசும்பொன் (ராமநாதபுரம்), மதுரை, திண்டுக்கல், சிவகங்கை தூத்துக்குடியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவர்.

இவ்வாறு இந்த மாத இறுதியில் மருது சகோதரர்கள் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி அடுத்தடுத்து வருவதால், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் குவிந்திருப்பர். குறிப்பாக, அனைத்து இடங்களுக்கும் சிவகங்கையை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 163 (1) (முந்தைய சட்டப்படி பிரிவு 144) தடை உத்தரவு அமலில் இருக்கும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள் உள்ளிட்டவற்றை முன்னறிவிப்பு இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top