சென்னை:ஒரே நாளில் 47 மீனவர்களை கைது செய்வது இதுதான் முதல் முறை மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!!!!

sen reporter
0

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட47தமிழக,காரைக்கால் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைஎடுக்கக்கோரிவெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2025 ஆம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் நிகழ்வு இது தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மீன்பிடிக்ககடலுக்குள்செல்லும்தமிழ்நாடுமீனவர்கள் இலங்கைகடற்படையினரால் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்கொள்ளையர்களால் மூர்க்கமாக தாக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,கைதான47மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், காரைக்காலை சேர்ந்த 17 மீனவர்கள் என 47 மீனவர்கள் இன்று (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும்.இந்த கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஒரேநாளில்அதிகஎண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இது தான்.

இது போன்ற கைது சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல். அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும் வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது. 9.10.2025 நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக்காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது போன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top