வேலூர்:வாக்குத்திருட்டை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் பள்ளிகொண்டாவில் கையெழுத்து இயக்கம்!!!
10/09/2025
0
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்தி வரும் வாக்குத்திருட்டை கண்டித்து வேலூர் மத்திய மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் பள்ளிக்கொண்டா நகரில் தொடங்கப்பட்டது.இந்நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அணைக்கட்டு வட்டாரத் தலைவர் தாண்டவமூர்த்தி, பள்ளிகொண்டா நகர நிர்வாகிகள் பாபு, பன்னீர்செல்வம், பள்ளிகொண்டா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிகொண்டா நகரத் தலைவர் அக்பர் பாஷா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், கையெழுத்து இயக்கத்தின் வேலூர் மண்டல பொறுப்பாளருமான கே.எஸ். அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் செங்கம் குமார், வேலூர் டீக்காராமன், செந்தில்நாதன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் வட்டார தலைவர்கள் வீராங்கன், சங்கர், தனசேகரன், ஆரோன், பேர்ணாம்பட்டு நகர தலைவர் முஜ்ஜமில் அஹ்மத், மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், சேகரன், பாரத். நவீன்குமார், சான் பாஷா, மாவட்ட மகளிர் தலைவர் திருமதி.கோமதி குமரேசன் மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல், RGPRS மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், சிறுபான்மையினர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் MD.ராகிப், எஸ்ஸி பிரிவு மாநில பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணி, சுரேஷ், காத்தவராயன் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் பொறியாளர் சுனில் மற்றும் நிர்வாகிகள் இலியாஸ் பாஷா, சத்தியமூர்த்தி, ரஜினிகாந்த், ராதா, ரிஸ்வான் , மன்சூர், நஸ்ருல்லா, ஜூபேர்,அஸ்கர், அப்சல், வலியுல்லா ராகுல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் வட்டார தலைவர் நித்தியானந்தம் நன்றி கூறினார்.
