தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் என அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், பட்டாசு குடோனுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பையும் மின்துறை அதிகாரிகள் மூலம் துண்டித்து விட்டு சென்றனர்.அனுமதி இல்லாமல் 5 டன் பட்டாசுகளை இறக்கிய குற்றத்திற்காக கைதாகி, ஜாமீனில் வெளி வந்த பட்டாசு கடை உரிமையாளர், அன்றிரவே அரசு அதிகாரிகள் வைத்த சீலை உடைத்து மீண்டும் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்: பட்டாசு குடோனுக்கு வைக்கப்பட்ட சீல் உடைப்பு தந்தை, மகன்கள் உள்ளிட்ட 5 பேர் கைது!!!
10/14/2025
0
திருப்பத்தூர்மாவட்டம்நாட்றம்பள்ளியை அடுத்த திரியாலாம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (53). சுமார் 5 வருடங்களுக்கு மேலாக பட்டாசு கடை நடத்தி வரும் இவர், அடியத்தூர், திரியாலம் உள்ளிட்ட பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.11 ஆம் தேதி உரிய அனுமதியில்லாமல் 5 டன் பட்டாசுகளை திரியாலம் பகுதியில் உள்ள குடோனில் இறக்கியுள்ளார். இது குறித்து ரகசிய தகவல் கிடைத்த ஜோலார்பேட்டை போலீசார், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரைந்து வந்து, பட்டாசு குடோனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, கடை உரிமையாளர் திருப்பதியை கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த திருப்பதி நேற்று (அக். 13) இரவு யாருக்கும் தெரியாமல் சீல் வைக்கப்பட்ட குடோனின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பட்டாசுகளை மற்றொரு குடோனுக்கு மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜோலார்பேட்டை போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், திருப்பதி மற்றும் அவரது மகன்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.இது குறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா, திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த போலீசார், பட்டாசு கடைக்கு வைக்கப்பட்ட சீலை உடைத்த குற்றத்திற்காக கடை உரிமையாளர் திருப்பதி மற்றும் அவருடைய மகன்களான சக்திவேல், பிரபு, லோகேஷ், உறவினர் சதீஷ்குமார் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
