இதனிடையே, கடந்த மாதம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா ஆஜராகி, விசாரணை அதிகாரிகளிடம் ஆதாரங்களை சமர்பித்து விளக்கம் அளித்தார். அதேபோல், மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணைநடத்தப்பட்டது.இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் மீது எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார் அளித்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதும், தனது புகாரை விசாரிக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, தனது வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுதா உடன் மாநில மகளிர் ஆணையத்துக்கு சென்ற ஜாய் கிரிசல்டா, தனது தரப்பு விளக்கங்களை தெரிவித்தார். இந்நிலையில், புகார் தொடர்பாக நாளை (அக் 15) நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசல்டா இருவருக்கும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை:மாதம்பட்டி ரங்கராஜ் நாளை ஆஜராக வேண்டும் மாநில மகளிர் ஆணையம் அதிரடி சம்மன்!!!
10/14/2025
0
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னை விட்டு விலகி சென்றுவிட்டதாக மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார்.மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இருவரும் நாளை மாநில மகளிர் ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னை ஏமாற்றி சென்றுவிட்டதாக கூறியிருந்தார். எனினும், இந்த புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.இதனைத்தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். மேலும், இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார்.
