முன்னதாக, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாநில மகளிர் உரிமை ஆணையத்திலும் புகார் அளித்ததை அடுத்து இரண்டு பேரிடமும் சமீபத்தில் மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது பேசியிருந்த ஜாய் கிரிசில்டா, “ஒரே அறையில் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் விசாரணையில் அடுத்தகட்ட நகர்வு என்னவென்று தெரியவரும். அரசியல் தலையீடு காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டிருந்த அறிக்கையில், "நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
சென்னை:பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.6.50 லட்சம் வேண்டும் ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தில் அதிரடி மனு!!!
10/30/2025
0
நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் வேலைக்கு செல்ல முடியவில்லை, அதனால் இதர செலவுகளுக்கான பராமரிப்பு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட கோரி ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகையாக வழங்க வேண்டும் என ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்துள்ளார்.பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே திருமணமான இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை கோயிலில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் திருமணத்தை முறைப்படி பதிவு செய்யவில்லை. இந்நிலையில் ஜாய் கிரிசில்டா கருவுற்ற நிலையில்அவரிடம்இருந்துரங்கராஜ்விலகியுள்ளார். இதையடுத்து ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தார். மேலும், ரங்கராஜால் பல முறை கருவுற்று அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாகவும் தெரிவித்து வந்தார். இந்நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்புதிதாகமனுஒன்றைதாக்கல்செய்துள்ளார்.அதில், “தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை. நான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. அதனால், வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
