நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டும் இன்றி அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கிஅணை,வைகைஅணைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் எந்தவிதபாதிப்பும் ஏற்படாது.இது2012ஆம்ஆண்டுநீதிபதிஆனந்த்தலைமையிலான ஐவர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவாக இருக்கிறது.2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம் லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மற்றும் கேரள அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. கேரளா அரசின் சதி திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக பெரியாறுவைகைபாசனவிவசாயிகள் சங்கஒருங்கிணைப்பாளர் பாலசிங்கம் பென்னிகுவிக் கூறுகையில், “முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளாக கேரள அரசு தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைத்து கொள்ளலாம் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய அறிக்கையின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இன்று வரை கேரளா அரசு அந்த தீர்ப்பை மதிக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணையை நம்பி தமிழகத்தில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் இருக்கின்றனர். ஆனால் அணை உடைந்தால் கேரளா மாநிலத்தில் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கேரளாவைச் சேர்ந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் விஷமப் பிரச்சாரத்தை முன் வைத்து தாக்கல் செய்த மனு குறித்து உச்ச நீதிமன்றம் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திருக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு கொடுத்த தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு. தற்போதைய வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.முல்லைப் பெரியாறு அணையில் உள்ள காவலர்களை அப்புறப்படுத்தி விட்டு அங்கு துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி அக்டோபர் 26 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயசங்கத்தினர்சார்பில்மாபெரும்உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
