அதனைத் தொடர்ந்து, 2002ல் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை பதவி வகித்தார். மேலும், தனது எளிமையால் ‘மக்கள் ஜனாதிபதி’ என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். தொடர்ந்து, 2015 ஜூலை 27ஆம் தேதி நிகழ்ந்த அவரது மறைவு, நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியது.பின்னர், அவரது உடல் சொந்த ஊரான இராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்.15 ஆம் தேதியான இன்று, ஏபிஜே அப்துல் கலாமின் 94வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என பலரும் அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில், இராமேஸ்வரம் பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும்அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர், இராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் உள்ளிட்டோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களும், பொதுமக்களும் அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
