இந்த பழக்கத்தால் நித்யா, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்றுவிட்டார். ஆனால், மனைவியை பிரிய முடியாமல் இருந்த வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்குநித்யாமறுப்புதெரிவித்துள்ளார். தன்னை விட்டு மனைவி சென்றது மற்றும் 3 குழந்தைகளை வைத்து கொண்டுதவித்ததுஎனவினோத்குமார் கடந்தசிலநாட்களாகவேமனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில்,மனைவிமீதுஆத்திரமடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறினார். குழந்தைகளும் தங்களின் அப்பா வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசையாகசாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே, வினோத்குமார் தான் பெற்ற 3 குழந்தைகளையும் துடிதுடிக்க சரமாரியாக கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதில், 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, வினோத்குமார் மதுக்கூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சிடைந்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், வினோத்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினார்.தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தை மீறிய உறவால், மனைவி அவரது ஆண் நண்பருடன் சென்றதால், தான் பெற்ற 3 குழந்தைகளையும் தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
