வேலூர்:வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்!!!
10/11/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கள் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்தது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவர், கிராம பொதுமக்கள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிராம பொதுமக்கள் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை கிராம சபை கூட்டத்தில் கேட்டு தெளிவு பெற்றனர். கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
