அந்த வகையில், இந்த ஆண்டு வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் பறவைகள்மயமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக, வெள்ளை நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சின்னக்கொக்கு, உண்ணிக் கொக்கு, மடையான், சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கு அதிகமான வெளிநாட்டு பறவைகள் தற்போது இங்கு முகாமிட்டுள்ளன.இவ்வாறு பல்வேறு நாடுகளில்இருந்துகொள்ளுக்குடிப்பட்டிக்கு வரும் பறவைகளுக்காக இப்பகுதி மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி, சுபநிழச்சிகள், கோயில் திருவிழாக்களில் பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் பண்டிகையை கொண்டாடுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வருகின்றனர். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சப்தம் பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், பட்டாசு இல்லாமல் தீபாவளியையை கொண்டாடி வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஜே. எம். சுப்ரமணியன் கூறுகையில், வேட்டங்குடிப்பட்டியில் பறவைகள் சரணாலயம் 140 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இங்குள்ள பறவைகளுக்கு சொந்தரவு கொடுப்பதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை. தீபாவளி பண்டிகைக்கு இங்கு வெடி வெடிப்பதில்லை. ஏதேனும் சுப நிகழ்ச்சிகளுக்கு வெடி வெடிக்க வேண்டுமென்றால் ஊருக்கு வெளியே சென்றுவெடிப்போம்என்றார்.தொடர்ந்து, வேட்டக்குடிபட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம் தெரிவிக்கையில், இந்த ஊரில் 55 ஆண்டுகளுக்கு மேலாக பட்டாசு வெடிப்பது கிடையாது. விவசாய காலங்களில் கண்மாயில் நீர் வரத்து அதிகரிக்கும் போது வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அவைகளுக்கு தொந்தரவு தரக் கூடாது என்பதற்காக பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதை கடுமையாக கடைபிடித்து வருகிறோம் என்றார்.மேலும், பறவைகள் சரணாலயத்தை காண வந்த மதுரையைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், இந்த பறவைகள் சரணாலயம் குறித்து படித்திருக்கிறேன். இந்த இடம் மிகவும் ரம்யமாக இருக்கிறது. பறவைகளைப் பார்வையிடுவதற்காக இங்கு இரண்டு டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பறவைகள் இங்கு வந்து செல்லும் என இந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். இந்த பறவைகளுக்காக கிராம மக்கள் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதில்லை என்பது தான் மிகவும் வியப்பாக உள்ளது.
பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருமித்த கருத்தோடு இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.சுற்றுலா வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்ரா கூறுகையில், இங்குள்ள சூழ்நிலை மிகவும் ரம்மியமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது. அனைவரும் இந்த இடத்தை வந்து ரசிக்க வேண்டும். பறவைகளுக்காக பாட்டாசு வெடிப்பதை தவிர்க்கும் இந்த கிராம மக்களை பார்க்கும் போது, பறவைகளுக்காக நாமும் நகரங்களில் குறைவாக பட்டாசுகளைவெடிப்போம்என்றார். இயற்கையோடு இணைந்து வாழும் கொள்ளுக்குடிப்பட்டி மக்களின் இந்த செயல், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அருமையான எடுத்துக்காட்டாகும்.
