மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் இந்த திடீர் உத்தரவு குழப்பம் ஏற்படுத்தும், ஆதார், அடையாள அட்டை, வாகன பதிவு சான்று, பாஸ்போர்ட் பெயர் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும். இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு இந்த அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்பொழுது நீதிபதிகள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறு செய்தால் மக்கள் எவ்வாறு முகவரி மாற்றம் செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்கள்.அப்பொழுது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி, மனுதாரர்மனுசெய்வதில்உள்நோக்கம் உள்ளது. இந்தியாவில் டெல்லி, உத்திர பிரதேஷ் போன்ற மாநிலங்களில் தெருக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது, மாநில தலைநகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது, அப்போதெல்லாம் வராத குழப்பம் இப்பொழுது எப்படி வந்துவிடப் போகிறது. அங்கு போய் மனுதாரர் தடை கோரி மனு தாக்கல் செய்யவில்லை ஆனால் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து அறிவித்து இருப்பதற்கு எதிராகமனுதாக்கல்செய்யப்பட்டுள்ளதுஇந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"அப்பொழுது நீதிபதிகள் சாதி பெயர்கள் நீக்குவது குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் இதற்கான என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவு படுத்தவில்லை. எனவே, அது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுங்கள். அதுவரை சாதிய பெயர்கள் மாற்றுவது குறித்து மக்கள் கருத்து கேட்பது உள்ளிட்ட ஆய்வு நடத்துவது செய்து கொள்ளலாம், இறுதி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம்" என்று உத்தரவிட்டு, தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.
மதுரை:சாலைகள்,தெருக்களில்உள்ளசாதியப்பெயர்களைமாற்றுவதுகுறித்துஅரசுஎந்தஇறுதிமுடிவும்எதுவும்எடுக்கக்கூடாதுஉயர்நீதிமன்றமதுரைகிளை!!!
10/18/2025
0
சாலைகள்,தெருக்களில்உள்ளசாதியப் பெயர்களை மாற்றுவது குறித்து அரசு எந்த இறுதி முடிவும் எதுவும் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவிட்டுள்ளது.குடியிருப்புகள்,தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளில் உள்ள சாதி சார்ந்த பெயர்களை நீக்க கடந்தசிலநாட்களுக்குமுன்புதமிழ்நாடுஅரசுஅரசாணைவெளியிட்டுள்ளது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்தமனுவில்தமிழகமுதலமைச்சர்அறிவிப்பின்படிதமிழ்நாட்டில்குடியிருப்புகள்,தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள்சாலைகள்,நீர்நிலைகளுக்கு உள்ளசாதிப்பெயர்களைநீக்கஅரசாணைதற்போதுவெளியிடப்பட்டுள்ளது.ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளது எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்எனமனுவில்கூறியிருந்தார்.இந்த மனு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்து ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
