இன்று காலை 6-30 மணி மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக சூரங்குடியில் 15 மில்லி மீட்டர் மழையும், கழுகுமலை, கயத்தார், கடம்பூரில் தலா 9 மில்லி மீட்டர் மழையும், எட்டையாபுரத்தில் 8.70 மில்லி மீட்டர் மழையும், வைப்பாரில் 7 மில்லி மீட்டர் மழையும், விளாத்திகுளத்தில் 6 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடியில் 3 மில்லி மீட்டர் மழையும், கோவில்பட்டியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி மாவட்டம் முழுவதும் 84.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.தற்போது வரை மிதமாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீர் வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாமல், குளம் போல் காட்சியளிப்பதால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த பகுதிகளில் உள்ள பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது கேள்விக்குறியாக உள்ளது.தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஆதிபராசக்தி நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அது மட்டுமல்லாமல் தேங்கியுள்ள மழை நீரில் சிகப்பு நிறத்தில் ரத்த கரை போல் பூச்சிகள் நடமாடுவதால், ஊறல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக மாநகராட்சி சார்பில் இந்த மழை நீரை அப்புறப்படுத்த கனரக மின்மோட்டார்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக விடுத்துள்ளனர்.மாநகராட்சியில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா நேரில் ஆய்வு மேற்கொண்டு மழை நீரை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!!!
10/21/2025
0
தூத்துக்குடியில் காலை 6.30 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 84.50 மில்லிமீட்டர்மழைபதிவாகியுள்ளது.தொடர்கனமழைகாரணமாககுடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள்அவதிக்குள்ளாகினர். வங்ககடலில்உருவாகியுள்ளகாற்றழுத்த தாழ்வு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
