மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்குஇலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சம் ஏக்கர் வரை நடவு பணிகள் முடிவுற்றன. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக பயிரிடப்பட்டுள்ள இளம் சம்பா பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம், பொன்னுக்குடி, கருவாழக்கரை, மேலகஞ்சாநகரம் உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட பயிர்கள் கடந்த ஒரு வாரமாக தண்ணீரில் முழ்கி உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் வயலில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், நடவு செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாகவும், பாசன வாய்க்கால், வடிகால், வயல்களில் ஒரே சீராக தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும் விவசாயிகள்வேதனைதெரிவிக்கின்றனர்.மேலும் தங்கள் பகுதியில் உள்ள பூவேந்திரன்ஆறுபாசனவாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் 3ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீரை தங்களால் விவசாய நிலங்களில் இருந்து வடிய வைக்க முடியவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே போர்கால அடிப்படையில் தங்கள் பகுதியில்உள்ளஆறுவாய்க்கால்களை தூர்வாரி தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்குஉரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
