இந்நிலையில், கடந்த வாரம் தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றி வந்த ரோலக்ஸ் என்ற ஆண் காட்டு யானை வனத் துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் வரகளியார் யானைகள் முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. ஒரு சில வாரங்களுக்கு பிறகு இந்த யானை மற்றொரு வனப் பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேபாளையம் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை அங்கு உள்ள நாகராஜன் என்பவரது விளை நிலத்திற்குள் புகுந்து மற்றொரு தோட்டத்திற்கு செல்ல முயன்றுள்ளது. அந்த இடத்தில் மின்கம்பம் இருந்ததால் அதன்மீது சாய்ந்து நின்றதாக தெரிகிறது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக இருந்ததால் யானை புதிதாக நிறுவப்பட்ட மின்கம்பம் மீது விழுந்ததாக தெரிகிறது. இதனால் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி அந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.இன்று அதிகாலை நாகராஜன் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே வந்த போது யானை உயிரிழந்து கிடப்பதையும், மின்கம்பம் சாய்ந்து கிடப்பதையும் பார்த்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உயிரிழந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறைனர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் விளை நிலத்துக்குள் புகுந்த காட்டு யானை; மின்கம்பம் மீது விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!!
10/23/2025
0
விளை நிலத்திற்குள் புகும் யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாலும், மனிதர்களை தாக்குவதாலும் அந்த யானைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்துவலியுறுத்திவருகின்றனர்.விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் மீது விழுந்து ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தைஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மதுக்கரை, சாடிவயல், தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கேரளா வனப்பகுதியை ஒட்டி இந்த பகுதிகள் அமைந்திருப்பதால் அங்கிருந்து வெளியே வரும் யானைகள் தமிழகவனப்பகுதிகளிலும், இங்குள்ள யானைகள் கேரள வனப்பகுதிகளிலும் சென்று வருவது வழக்கம்.மேலும் இந்த யானைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுவதும் வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, விளை நிலத்திற்குள் புகும் யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் அவை மனிதர்களை தாக்குவதால் அந்த யானைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
