தூத்துக்குடி:மகிழ்ச்சிபுரம் மையவாடியை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை!!!
10/12/2025
0
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியில் உள்ள மையவாடியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் முனியசாமி கோவில் பின்புறம் உள்ள மையவாடியில் உள்ளே இருக்கும் ஒடை மரங்களை அகற்றி, பல மாதங்களாக தேங்கி உள்ள மழைநீரை லாரி மூலம் எடுத்து டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். இதுகுறித்து பருவ மழை துவங்கும் முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
