மதுரை:வகை,வகையான கீரைகளா மதுரை வார சந்தையில் கிடைக்கும் அரிய கீரைகளின் பட்டியல்!!!

sen reporter
0

சிறுகுறிஞ்சான், புளிச்சக்கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, தூதுவளை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மாயன் கீரை,அகத்திக்கீரை,சிவப்பு பொன்னாங்கண்ணி என பல்வேறு வகையானகீரைகள்காட்சிப்படுத்தப்பட்டுவிற்பனைக்குவைக்கப்பட்டிருந்தன.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையில் நடைபெற்ற இயற்கை சந்தையில் 40க்கும் மேற்பட்ட கீரை வகைகளை பாரம்பரிய இயற்கை விவசாயிகள் காட்சிப்படுத்தினர்.மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை பாரம்பரிய இயற்கை விவசாயிகள் மற்றும்பொதுமக்களைஒருங்கிணைக்கும் இயற்கை சந்தை' நடைபெற்று வருகிறது. இச்சந்தையில் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான இயற்கை சார்ந்த வேளாண்பொருட்கள்,உணவுபதார்த்தங்கள், அலங்காரப் பொருட்கள் என பலவற்றையும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் இன்று அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை நடைபெற்ற இயற்கை சந்தையில் 40க்கும் மேற்பட்ட கீரை வகைகளை காட்சிப்படுத்தி பொதுமக்களுக்கு கீரைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிறுகுறிஞ்சான், புளிச்சக்கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, தூதுவளை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மாயன் கீரை, அகத்திக்கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி, சிவப்பு தண்டு கீரை, பாலக்கீரை, செங்கீரை, நாயுறுவி, வல்லாரை, அம்மான் பச்சரிசி, கோவக்கீரை, விழுதி, கான வாழை, வேலிப்பருத்தி, முள்முருங்கை என 40-க்கும் மேற்பட்ட கீரை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அவை விற்பனைக்கும்வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பேசிய விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் கீரை விவசாயி ஆனந்தகுமார், “எங்களது பண்ணையில் எந்த ஒரு செயற்கை உரங்களையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. அதிகமான ரசாயன உரங்களை பயன்படுத்தி கீரைகளை உற்பத்தி செய்வதால் எந்த பலனும் இல்லை. மக்களுக்கு தரமான சத்தான கீரைகளை வழங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எங்களது பண்ணையில் மட்டும் அரைக்கீரை, பாலக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மாயன் கீரை, செங்கீரை என 15 வகையான கீரைகளை நாங்கள் சாகுபடி செய்கிறோம். இதில் குறிப்பாக செங்கீரை எங்கள் ஊரை தவிர எங்கும் கிடைக்காது. கால்சியம், இரும்புச்சத்து அதிகம் கொண்ட கீரை இது. ஒவ்வொரு மாதமும் மதுரையில் நடைபெறும் இயற்கை சந்தையில் நாங்கள் அவற்றைக் கொண்டு வந்து மக்களுக்கு வழங்கி வருகிறோம்” என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அந்நியந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ், “சிறுகுறிஞ்சான் என்ற கீரை சர்க்கரையை கட்டுப்படுத்த கூடியது. அதே போன்று விழுதி என்ற கீரையின் பத்து இலைகளை சாப்பிட்டுவிட்டு ஓடினால் இளைப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு, சீந்தில் என்ற கீரை வகை, கற்றாழை போன்று கீரை நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்கக் கூடியதாக உள்ளது. மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை நம் உடம்பை பொன் போல மினுமினுக்க வைக்கும். நாட்டு வல்லாரை நினைவாற்றலை தூண்ட கூடியது. பல வைட்டமின்களை கொண்ட தவசி கீரை நாம் அனைவரும் உட்கொள்ள வேண்டிய ஒன்றாகும். நமது உடம்பில் உள்ள பல்வேறு உபாதைகளை தீர்க்க வல்ல அற்புதமான மூலிகையாக கீரை வகைகள் உள்ளன” என்றார்.

இதையடுத்து பேசிய இயற்கை சந்தையின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த், “கடந்த 2024ஆம் ஆண்டு துவங்கிய இயற்கை சந்தை தற்போது வரை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இயற்கை முறையில் விவசாயம் செய்கின்ற விவசாயிகள் அனைவருக்கும் இந்த சந்தை அவர்களின் பொருட்களை விற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. காய்கறிகள், அரிசி, பருப்பு, பழங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவை சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றை சாதரணமாக அல்லாமல் ஒவ்வொரு மாதமும் காய்கறி, பழங்கள் என சத்துகள் நிறைந்த உணவு பொருள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறுகிறது. உதாரணமாக மாம்பழங்கள், சிறுதானியங்கள் குறித்து முன்னதாக காட்சிப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் இந்த மாதம் கீரை வகைகளை முக்கியத்துவம் படுத்தியுள்ளது” என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top