தூத்துக்குடி:மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனைமர விதைகள் விதைக்கும் பணி!!!!
10/17/2025
0
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக நல்லூர் குளத்தாங்கறையில் 10 ஆயிரம் பனை மர விதைகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.தமிழர்களின் தேசிய மரமான பனை மரத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். நமது பாரம்பரியமரமான பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும். என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் தடுக்க கடற்கரை ஓரங்களிலும், நீர் நிலைகளை பாதுகாக்க, மண்ணரிப்பை தடுக்க ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்காங்கரை, ஏரி, மற்றும் சிறிய குட்டம் போன்ற நீர் நிலைகளிலும் , நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு கோடி பனைமர விதைகள் விதைத்து பணியை சமூக அக்கறையோடு,சேவைமனப்பாண்மையோடு, எந்த லாபனுக்கும் இன்றி தொடர்ந்து செய்து வருகிறார்கள்.இதன் தொடர்ச்சியாகநல்லூர்குளத்தாங்கரையில் தமிழ்நாடு அரசு, பசுமை தமிழகம் இயக்கம் , தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நல்லூர் குளத்தாங்கரையில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆன்றோ கலந்து கொண்டு பனை விதைகள் விதைக்கும் பணியை தொடக்கி வைத்தார் .மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராஜாஒன்றியபணி்மேற்பார்வையாளர் தமிழரசன், ஊராட்சி செயலர் மாரிராஜ் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி உதவியாளர் சரவணன், பணித்தள பொறுப்பாளர் சகாயராணி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ். பானுமதி நன்றி கூறினார்.
