வேலூரில் அதிமுகவின் 54வது ஆண்டு விழா!!!
10/17/2025
0
வேலூரில்அதிமுகவின் 54 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு,அதிமுக நிறுவனர், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு வேலூர் மாநகர் மாவட்ட ம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.வேலூர்மாநகர் மாவட்டகழகசெயலாளர்எஸ்.ஆர்.கே. அப்புதலைமையில்வேலூர்சத்துவாச்சாரி மேற்கு பகுதி கழக செயலாளர் டி.டி. ஆர். ரகு ஏற்பாட்டில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணி விக்கப்பட்டுகழகநிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட வர்த்தக அணி செயலர் சூளை கே. எம். ஆனந்தன், ஜனனீ சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
