கோயில் பிரகாரத்தில் உள்ள யாகசாலைக்கு காலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளினார். கோயில் முன்பு ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர். முன்னதாக அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை உடை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27 ஆம் தேதி கோயில் முன்புள்ள கடற்கரையில் நடைபெறவுள்ளது. இந்த சூரசம்காஹத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருவிழா காலங்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நிலையில் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா!!!
10/22/2025
0
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு கந்த சஷ்டி விழா, ஆவணித் திருவிழா, மாசித்திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.இந்த கந்த சஷ்டி விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
