ஆனால் நேரம் போக போக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறுகள் மற்றும் உயிர்காக்கும் கருவிகளை பயன்படுத்தி தீயணைப்புத் துறையினர் சிறுவனை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அதேபோல் அரூர் பெரியார் நகர்,அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.குறிப்பாக, தீர்த்தமலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் நுழைந்ததால் பயிர்கள் சேதமாகின. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். சதீஷ் மற்றும் எம்.பி ஆ.மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தருமபுரி அருகே வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்புத்துறை!!!
10/24/2025
0
தருமபுரி அருகே தென்பெண்ணை ஆற்றில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.அரூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை,5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர்பத்திரமாகமீட்டனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இதனால் அக்டோபர் 16ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக அரூர், தீர்த்தமலை சுற்று வட்டார பகுதிகளில் வரலாறு காணாத அளவில் சுமார் 2 மணி நேரத்தில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இது தமிழக அளவில் நேற்று பதிவான மழை அளவில் இரண்டாம் இடமாகும். இதன் காரணமாக அரூர் பகுதியில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அரூர் அடுத்த டி. அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் ரித்திக் (15). இவர் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றபோது திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
