இந்நிலையில், வடக்கிழக்கு பருவமழை துவங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா விவசாயிகள் நெல்களை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.தினசரி ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகஅரசுகூறும்நிலையில்,நெல்கொள்முதல்செய்வதில்அரசுபோதியமுன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிகுற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்படும் விவசாயிகள் நலன் கருதி 17% லிருந்து நெல்லின் ஈரப்பதத்தை 22 % உயர்த்தி தர வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, நெல்லின் ஈரப்பதத்தை, 22% உயர்த்த வேண்டி மத்திய உணவுத் துறைக்கு தமிழ்நாடு அரசின் உணவுத் துறை மூலமாக கடிதம் அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய உணவு மற்றும் பொதுப் பகிர்வு அமைச்சகம், '' தமிழ்நாடு அரசின் கடிதம் பெறப்பட்டோம். அந்த கடிதத்தின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வதற்கான தளர்வு கோரிக்கை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதற்கான உண்மை நிலையை மதிப்பீடு செய்ய மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் சார்பில் துணை இயக்குநர்கள் தலைமையில் இரண்டு குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் மாநில அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிரிந்து சென்று நெல் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
