இந்த நிகழ்வினை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கொடுங்கையூர் குப்பை கிடங்கு வளாகத்தில் உள்ள கந்தல் குப்பைகளை சேகரிக்கும் பணியில் 308 பேர் உள்ளனர். இவர்கள் சாலை ஓரங்களில் இருக்கக் கூடிய குப்பைகளை சேகரித்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வரக் கூடியவர்கள். இவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 128 நபர்களுக்கு தனியார் நிறுவனம் மூலமாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர் பணிக்கான நியமனஆணைஇன்றுவழங்கப்பட்டுள்ளதுஎன்றார்.தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊதியம் குறித்து கேட்டதற்குஇவர்களுக்குமாதம்தோறும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீடும் உண்டு. இதே போல் பெருங்குடி மற்றும் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கந்தல் குப்பைகளை சேகரிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதையடுத்து, அவரிடம் தூய்மைப் பணியாளர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்டதற்கு, “தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.700-க்கு மேல் வழங்குவதற்கான ஒப்புதல் இன்று பெறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டம் விரைவில்தொடங்கப்படும்”என்றார்.தொடர்ந்து மழை கால முன்னெடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, “மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணர்வு இல்லம்தோறும் ஏற்படுத்தி வருகிறோம். பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி அனைத்து நிலையிலும் தயாராக உள்ளது. தாழ்வான பகுதிகளில் தேவையான அளவு மோட்டார் பம்புகள் தயார் நிலையில்உள்ளனஎன்றார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
