வேலூர்:மழையால் பாதிக்கப்பட்ட அணைக்கட்டு தொகுதி புதுமனை எம்ஜிஆர் நகரில் எம்எல்ஏ நந்தகுமார் நேரில் ஆய்வு!!!
10/22/2025
0
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்ஆணைக்கிணங்க,வடகிக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, புதுமனை எம்ஜிஆர் நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இதையறிந்த திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் 22ம் தேதி நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக அரசு அதிகாரிகளை அழைத்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து மழை நீரை விரைந்து அகற்றுமாறு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் சாரதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
