வேலூர்:காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது!!!
10/15/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையநுழைவுவாயிலில்சந்தேகப்படும்வகையில் கடந்த 14ஆம் தேதி மாலை ஒருவர் நின்று கொண்டு ரயில் பணிகளை அழைத்து விசாரித்து சிலரிடம் பணத்தை வசூல் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த காட்பாடி ரயில்வே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர் .அதில் அவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷித் ரஸ்தோகி (38) எனவும், தான் டிக்கெட் பரிசோதகர் எனவும் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். இந்நிலையில் அவரது அடையாள அட்டையை வாங்கி காட்பாடி ரயில்வே போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது அது போலியானது என தெரியவந்தது. அவரும் போலி டிக்கெட் பரிசோதகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் காவலில் அடைத்தனர் ரயில்வே போலீசார் .
