திருச்செந்தூர் கோவிலில் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு அன்னதான கூடம் திறப்பு!!!
10/14/2025
0
திருச்செந்தூர் கோவிலில் ரூ. 16.14 கோடி மதிப்பிலான அன்னதானக் கூடம், புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு மற்றும் சலவைக் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ரூ. 11.25 கோடியில் தரைதளம், முதல் தளம் என 2 தளங்ளில் சுமார் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம், ரூ. 3.05 கோடியில் பழமைமாறாமல் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு மற்றும் ரூ. 1.84 கோடியில் கட்டப்பட்டுள்ள சலவைக் கூடம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.இதையடுத்து, திருச்செந்தூரில் புதிய அன்னதானக் கூடத்தில் அன்னதானத்தை தக்கார் ரா.அருள்முருகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இணை ஆணையர் க. ராமு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம், காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், வட்டாட்சியர் தங்கமாரி, நகர்மன்றத் தலைவர்சிவஆனந்தி,துணைத்தலைவர்செங்குழிரமேஷ்,திருக்கோயில்உதவி செயற்பொறியாளர் பரமசிவன், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, நகர்மன்ற உறுப்பினர்கள் சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
