வேலூர்:திராவிடர் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!!
10/16/2025
0
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்நடந்தது. இன்று வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கண்டன உரை நிகழ்த்தினார்.கண்டனஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், காப்பாளர் சடகோபன், மாவட்ட இளைஞரணி தலைவர் தரணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
