இதில் கலி, தமிழ், ஆங்கில ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் 1904-ல் நாகமநாயக்கர் இவ்வூர் சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மடப்பள்ளி ஒன்றையும் கட்டிக் கொடுத்துள்ளார் என அக்கோயில் கல்வெட்டில் உள்ளது. ஒருவேளை அக்காலகட்டத்தில் இக்கிராமத்தின் ஆட்சியாளர்களாக இவர்கள் இருந்திருக்கலாம்.கி.பி.13 ஆம் நூற்றாண்டில், குலசேகரப்பாண்டியன் ஆட்சியில் மக்களின் பயன்பட்டுக்காக ஒரு துலாக்கிணறு விழுப்பனூரில் தோண்டப்பட்டுள்ளது. இம்மாவட்டம் முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட சமயங்களில் இத்தகைய கிணறு, குளங்களை தனி நபர்களும் அமைத்து கொடுத்துள்ளனர். நரிக்குடியில் உலகப்பன் சேருவைக்காரர், குண்டுகுளத்தில் கருப்பணக்குடும்பன் குளங்களையும், சோலைசேரியில் பெத்தநல்லுநாயக்கர் எண்கோண வடிவ கிணற்றையும் உபயமாக செய்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.இந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தான கிணறு அமைத்துக்கொடுத்ததற்கான வாய்ப்பு இருப்பதாகவும், முழுமையாக ஆராய்ந்தால் மேலும் சில கிணறுகள் கண்டறியப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகரில் 123 ஆண்டுகளுக்கு முன் தானமாக கட்டப்பட்ட கிணறு கண்டெடுப்பு!!!
11/11/2025
0
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது கிணறு, குளங்களை தனி நபர்கள் தானமாக அமைத்து கொடுத்தது வழக்கமாக இருந்ததுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.தண்ணீர் பஞ்சம் காரணமாக 123 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக வெட்டி கொடுத்த கிணறும், அதுதொடர்பானகல்வெட்டும்கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் 123 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் மக்களுக்கு தர்மமாக கருங்கற்களால் ஆன தண்ணீர் கிணறு அமைத்துக் கொடுத்த தகவல் சொல்லும் கல்வெட்டு ஒன்றைதொல்லியல்ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர். மல்லாங்கிணரில் இருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவிடம் அருகில் கருங்கற்களால் சதுர வடிவில் கட்டப்பட்ட கிணற்றின் மேல் விளிம்பில் அந்த கல்வெட்டு இருப்பதை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.இந்த கல்வெட்டு குறித்து அவர்கள் கூறியதாவது, பழங்காலம் முதல் மன்னர்கள், வணிகர்கள், ஜமீன்தார்கள், கிராம ஆட்சியாளர்கள், மக்கள் என பலரும் தானம் செய்து அதைக் கல்வெட்டுகளாகவும், செப்பேடுகளாகவும் பதிவு செய்துள்ளனர். இதில் தண்ணீர் தானம் மிகப் புண்ணியமாக கருதப்பட்டது.கிணற்றின் விளிம்பில் இரண்டு வரியில் உள்ள கல்வெட்டில், கலியுகம் 5002, பிலவ ஆண்டு மாசி மாதம், இங்கிலிஸ் வருடம் 1902-ல் மல்லாங்கிணர் க.நாகம நாயக்கர் குமாரர் கணக்கு குப்புசாமி நாயக்கர் ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக தர்மம்’ என்று கருங்கற்களால் ஆன இக்கிணற்றை அமைத்து கொடுத்ததாக தெரிவிக்கிறது.
