கோவை:ஸ்டென்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 163 வது நிறுவனர் நாள் விழா!!!

sen reporter
0

கோவை அண்ணா சிலை அருகே உள்ள ஸ்டென்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் பள்ளியின் 163வது நிறுவனர் நாள் விழாவில் இன்று பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி நிர்வாக குழு குழுவின் தலைவர் மெர்சி ஓமன் , பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே பிலிப் பவுலர் , பொருளாளர் மருத்துவர் ஜேம்ஸ் ஞானதாஸ் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னாள் இந்நாள் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் முதல் நிகழ்வாக வேத வாசிப்பும் தொடக்க வழிபாடும் நிகழ்த்தப்பட்டன. மேடையில் ஆசிரியர்களும் இசைக் குழுவினைச் சார்ந்த மாணவர்களும் இணைந்து பள்ளியின் வழிபாட்டுப் பாடலைப் பாடினர். இறைவழிபாட்டினை பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் சஜீவ் சுகு முன்னின்று நிகழ்த்தினார்.தொடர்ந்து, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன் வரவேற்புரை வழங்கிச் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார் .சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் பன்னாட்டு உறவுகள் துறையின் புலமுதன்மையருமான விக்டர் ஆனந்த்குமார் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.பள்ளியின் தாளாளர் ஆர் ஜே பிலிப் பவுலர் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கிச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் சிறப்புரை வழங்கும் பொழுது தமது கடந்த காலப் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்தார் . பள்ளியின் நிறுவனர் இராபர்ட் ஸ்டேன்ஸ் வரலாற்றை நினைவு கூர்ந்தார். பரிசு பெற்ற மாணாக்கர்களைப் பாராட்டி ஊக்கமூட்டினார் பொறுப்பு மிக்க குடிமக்களாகவும் , மனிதநேயம் மிக்க மானுடர்களாகவும் . இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீனமயமாக்களுக்கேற்ப மாணாக்கர்கள் தங்கள் அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.பணியில் வெள்ளி விழாக் கண்ட ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் பெயரை நிர்வாகக்குழுவின் தலைவர் வாசிக்க சிறப்பு விருந்தினர் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கிப் பெருமை சேர்த்தார்.சாதனை மாணாக்கர்கள் பரிசளித்துப் பாராட்டப்பட்டனர்.விழாவின் நிறைவாக ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் துணை முதல்வர் வ.திவாகரன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் துணை முதல்வர் பிரியா சீன் , உதவித் தலைமையாசிரியர் மார்டின் லூதர் கிங் , ஸ்டேன்ஸ் சகோதரப் பள்ளிகளின் முதல்வர்கள் , தலைமை நிர்வாக அலுவலர், ஆகியோர் கலந்து கொண்டனர்.விழா நிறைவுக்குப் பின் மேனாள் மாணாக்கர் ஆலோசனைக் கூட்டம் முதன்மை அரங்கில் நடைபெற்றது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top