கோவை:26 ஆம் தேதி கோவையில் செம்மொழி பூங்கா முதல்வரால் திறக்கப்பட உள்ளது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்!!!!

sen reporter
0

கோயம்புத்தூர் விழா இன்று முதல் துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் துவக்க நிகழ்வாக கொடிசியா மைதானத்தில் SKY DANCE எனப்படும் ஒளி,ஒலி லேசர் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மாநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த நிகழ்ச்சி வியந்து பார்க்கும் அளவிற்கு இதன் ஒருங்கிணைப்பாளர்கள் நடத்துவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் சிறப்புடன் சிறப்பாக நடத்துவதாக தெரிவித்தார். மேலும் இந்த விழா 50 ஆண்டுகள் கடந்தும் நம் மண்ணின் பெருமையை சொல்லும் என்று தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் ஒரு மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்றால் அது கோவை மாவட்டம் தான் என்றும் அத்தகைய சான்றோர்கள் உருவாக்கிய மண் கோவை மண் என கூறினார். வருகின்ற 26 ஆம் தேதி கோவை மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கின்ற வகையில் செம்மொழிப் பூங்காவை முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார் அது கோவைக்கு பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும் என கூறினார். முதல்வரின் எண்ணங்களை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும் அதிலும் கோவைக்கு தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும்பொழுது எல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்து முதல்வர் கேட்டறிவார் என கூறினார். நானும் என்னுடைய ஊருக்கு சென்றால் YI- Young Indian சட்டையை தான் அணிவேன் என்றும் இனி ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பங்கும் இந்த கோவை விழாவில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக தெரிவித்த அவர் இந்த கோவை விழா நம்முடைய விழா குடும்ப விழா என தெரிவித்தார்.முதல்வரின் வருகை, பீகார் தேர்தல் முடிவு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாளை முழுமையாக பதில் அளிக்கிறேன் என தெரிவித்துச் சென்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top