வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கண்டிப்பேடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமையில் ஆயகவுண்டனூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் ஆலய வளாகத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ், ஊராட்சி செயலர் பாலாஜி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கிராம மக்கள் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை வாரியான அதிகாரிகள் பதில் அளித்தனர். கண்டிப்பேடு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் வெல்டிங் நிறுவனத்திற்கு உள்ளே உள்ள இன்னொரு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து அழிப்பதாக கூறிக்கொண்டு அதனை எரியூட்டுவதும், இரவு நேரங்களில் அந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகளுடன் 20 அடி பள்ளம் தோண்டி புதைப்பதும் என கிராமத்தையே சுடுகாடாக மாற்றி வருகின்றது ஒரு தனியார் கம்பெனி. இந்த பயோ லிங்க் என்ற நிறுவனத்தினால் கிராமத்தின் நீர்நிலை ஆதாரம் விஷமாக மாறி வருவதாக குறிப்பாக நிலத்தடி நீர் மாறி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அத்துடன் சாம்பல் கழிவுகள் பொதுமக்கள் தலைகளிலும், திறந்து வைத்துள்ள குடிநீர் பாத்திரங்களில் தண்ணீர் மேல் படிவமாக படிவதும் வழக்கமாக உள்ளதாக கூறுகின்றனர் .இதனால் தங்கள் சந்ததிகள் கொடிய நோய்களான சுவாசக் கோளாறு, புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்று பொதுமக்கள் காரசாரமாக ஊராட்சி மன்ற தலைவி சரஸ்வதியிடம் தெரிவித்தனர். அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட தீர்மானங்களை ஊராட்சி செயலர் சுரேஷ் வாசிக்க தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர்:கண்டிப்பேடு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்!!!!
11/01/2025
0
