திண்டுக்கல்:அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் டிடிவி தினகரன்! திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!!!
11/01/2025
0
செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என அனைவரும் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் என திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.ஜெயலலிதா இறந்த போது ஸ்டாலினுடன் சேர்ந்து அதிமுகவை ஆட்சியில் இருந்து கவிழ்க்க திட்டம் தீட்டியவர் தினகரன் என திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:அதிமுக ஒரு ஆலமரம். டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன் என அனைவரையும் வளர்த்து விட்டது அதிமுக. டிடிவி தினகரன் யார் தெரியுமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு 18 எம்எல்ஏக்களை தன் வசம் வைத்து கொண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து திட்டம் தீட்டியவர். லண்டனில் இவர் வைத்துள்ள ஹோட்டலால் எழுந்த விவகாரத்தில் சிறைக்கு சென்று வந்தவர் என்றார்.தொடந்து ஓபிஎஸ் குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் சாதாரண ஆள் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மாளுக்கு இடையேயான தேர்தலின் போது, போடி தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக களம் இறங்கிய வெண்ணிற்றாடை நிர்மலாவுக்கு ஏஜென்டாக செயல்பட்டவர். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக மீது ஓபிஎஸ் பல்வேறு வழக்குகளை போட்டுள்ளார். ஆனால் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்குதான் கட்சியின் சின்னம், கொடி ஆகியவை சொந்தம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் போடாத நாடகம் இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை என்றார்.தற்போது செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் இணைந்து விட்டனர். இனி இந்தியாவையே அழித்து விடுவார்கள் என செய்திகள் வெளியாகும். ஆனால், ஒன்றும் நடக்காது. இவர்கள் கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி சென்றவர்கள். வளர்த்து விட்ட கட்சிக்கே துரோகம் செய்தவர்கள்.இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மரியாதை என்பதை செங்கோட்டையன் புரிந்து கொள்ள வேண்டும். தேவர் ஜெயந்தி விழாவில் பார்த்திருப்போம், தினகரனும், ஓபிஎஸும் செங்கோட்டையனை மூத்தவராக பார்க்காமல் நடுவில் நிற்க வைத்து இடித்துக் கொண்டு செய்தியாளர்களை நோக்கி முன் வந்து பேசுகிறார்கள். முதல் நாளே இந்த கதி. எம்ஜிஆர் பெயரை வைத்து ஏமாற்றலாம் என செங்கோட்டையன் மற்றும் மற்றவர்கள் நினைக்கிறார்கள். யாரும் அவர்களை நம்பாதீர்கள்.அதிமுக கட்சியை அழிப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள் தீட்டி வருகிறார். யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றார்.
