வேலூர்:மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!!!
11/12/2025
0
வேலூர் கோட்டை மகாத்மா காந்தி சிலை அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பங்கேற்றார். உடன் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா வேலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புரணர்வு பேரணியை ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பற்குணன், முதன்மைக்கல்வி அலுவலர் பிரேமலதா மற்றும் அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டனர்.இந்த பேரணியின் போது மழைநீர் சேகரிப்பு, அதற்கான கட்டமைப்புகள் அமைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களைமின்னணு திரை வீடியோ வாகனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மழைநீரை உரிய முறை களை பின்பற்றி சேகரிக்கலாம்.இதனால் நிலத்தடி நீர் வெளி கிணறு, குழாய்க் கிணறு, கசிவுநீர் குழிகள் அல்லது துளையுடன் கூடிய கசிவுநீர் குழிகள் மூலம் சேமிக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
